என் மலர்

  செய்திகள்

  இத்தனை பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றனரா? புதிய குழப்பம் ஏற்படுத்தும் வைரல் பதிவு
  X

  இத்தனை பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றனரா? புதிய குழப்பம் ஏற்படுத்தும் வைரல் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2019 இந்திய பொது தேர்தலில் சில பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகியுள்ளது.  இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் சிலர் 2,11,820 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் 1,40,295 வாக்குகளும் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் அடங்கிய பதிவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படாமல், இப்படி ஒரே அளவிலான வாக்குகளை பெறுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது.  சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவில் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக அவர்களின் பெயர்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற ஒரே அளவு வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் பதிவிட்டு அவர்களின் பெயர் பதிவிடப்படவில்லை.   இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் சரியாக 2,11,820 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 1,40,295 வாக்குகளை பெற்றிருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது. 

  வைரல் பதிவின் படி ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் பெற்ற உண்மையான வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  போலா சிங்: 6,77,196
  மேனகா காந்தி: 4,58,281
  உபேந்திரா நர்சிங்: 5,35,594
  ஹரிஷ் திவேதி: 4,69,214
  சத்யபதி சிங்: 5,19,631
  சங் மித்ரா மவுரியா: 5,10,343
  குன்வர் பாரதேந்திரா சிங்: 4,88,061

  தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பா.ஜ.க. வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் எதுவும் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.
  Next Story
  ×