search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
    X

    தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

    தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

    காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், மேகதாது விவகாரம் குறித்த நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும். இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியது.



    மேலும், மே மாதத்துக்குள் 2 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் எனவும், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 9.2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு விடுவிக்க ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 
    Next Story
    ×