search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க வருவார் - ராகுல் மீது ஸ்மிரிதி தாக்கு
    X

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க வருவார் - ராகுல் மீது ஸ்மிரிதி தாக்கு

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க ராகுல் காந்தி வருவார் என தாக்கி பேசியுள்ளார்.
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இரானி நேற்று நடந்த பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர்  மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை,  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும்.  அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.  

    மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி,  அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.

     இவ்வாறு அவர் பேசினார்.  
    Next Story
    ×