என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி சாலைகளில் பிரியங்கா காந்தி பேரணி
  X

  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி சாலைகளில் பிரியங்கா காந்தி பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, இன்று பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Congress #SheilaDikshit
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் இன்னும் இரண்டு கட்டங்கள் மீதமுள்ள நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

  இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஷீலா தீட்சித் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார்.  மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். திறந்த வாகனத்தில் சென்ற அவர் டெல்லியில் முக்கிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

  டெல்லியில் பிரதமர் மோடியும் பா.ஜ.க. சார்பில் மாலையில் பிரசாரம் செய்ய உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. #LokSabhaElections2019 #PriyankaGandhi #Congress #SheilaDikshit
  Next Story
  ×