என் மலர்
செய்திகள்

உலகமே இந்தியாவை பற்றி பேசுகிறது - மோடி பெருமிதம்
ராஜஸ்தானில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகமே இந்தியாவை பற்றி பேசுகிறது என பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #PMModi
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தின் ஹிண்டவுன் பகுதியில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்த நகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நின்றுபோனதா? இல்லை. 2008 ஜனவரியில் உ.பி.யிலும், மே மாதம் ஜெய்ப்பூரிலும், ஜூலையில் பெங்களூருவிலும், அடுத்த நாளில் அகமதாபாத்திலும், செப்டம்பரில் இரு பயங்கரவாத தாக்குதல், அக்டோபரில் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலில் தொடர் குண்டுவெடிப்புகள் என அனைத்து நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
ஐபிஎல் தொடர் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தென் ஆப்ப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டன.
சில தினங்களுக்கு முன்பு மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தொடர் நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. எனவே, தற்போது உலகமே இந்தியாவை பற்றி பேசி வருகிறது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #BJP #PMModi
Next Story






