என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி ஏற்படும் - ராகுல்காந்தி
    X

    தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி ஏற்படும் - ராகுல்காந்தி

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளின் முதல் பணியாகும். நாடு முழுவதும் பா.ஜனதா வலுவான எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    மோடியை தோற்கடித்து ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க வேண்டும். நாட்டின் அனைத்து அமைப்புகளையும் சமூக ஒற்றுமையையும் பா.ஜனதா சீர்குலைப்பதையும் தடுக்க வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சியை அதிகரித்தல், பொருளாதாரத்தை முன்னேற்றுதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், நல்லிணக்கம், நீதி, சமதர்மத்தை பாதுகாத்தல் போன்றவற்றுக்காக எதிர்க்கட்சிகள், நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.

    இதற்காக தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi

    Next Story
    ×