என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது புகார்- ஜனாதிபதிக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம்
    X

    ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது புகார்- ஜனாதிபதிக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம்

    ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது ஜனாதிபதிக்கு தேர்தல் கமி‌ஷன் புகார் கடிதம் எழுதியுள்ளது. #Loksabhaelections2019 #PMModi #KalyanSingh #EC
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில கவர்னராக கல்யாண்சிங் இருக்கிறார்.

    இவர் உத்தரபிரதேச மாநில முன்னாள் பா.ஜனதா முதல்-மந்திரி ஆவார்.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கல்யாண்சிங் பேசியுள்ளார்.

    சமீபத்தில் அவர் பேட்டி அளிக்கும்போது, “ஒவ்வொருவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரையே தேர்வு செய்ய வேண்டும். அவர்தான் நாட்டுக்கு தேவையானவர்” என்று கூறி இருந்தார்.

    கவர்னர் பதவியில் இருக்கும் ஒருவர் தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு உயர்பதவி வகிக்கும் கவர்னர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறை மீறலாகும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது ஜனாதிபதிக்கு தேர்தல் கமி‌ஷன் புகார் கடிதம் எழுதியுள்ளது.

    தேர்தல் விதிமுறை மீறும் 2-வது கவர்னர் கல்யாண்சிங் ஆவார். இதற்கு முன்பு 1993-ம் ஆண்டு இமாச்சலபிரதேச கவர்னர் குல்சர்அகமது தேர்தல் விதிமுறைகளை மீறி இருந்தார். அவர் தனது மகள் சயீத் அகமதுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்த விதிமீறலை தொடர்ந்து குல்சர் அகமது தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Loksabhaelections2019 #PMModi #KalyanSingh #EC
    Next Story
    ×