என் மலர்
செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பை குடிசை மக்களுக்கு 500 சதுர அடியில் வீடு - ராகுல் காந்தி
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பையில் உள்ள குடிசைவாசிகளுக்கு குடிசை சீரமைப்பு திட்டத்தில் 500 சதுர அடி பரப்பளவில் வீடுகள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #Congress #RahulGandhi
மும்பை:
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பை குடிசை பகுதி மக்களுக்கு குடிசை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 500 சதுர அடியில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகள் கட்டித் தரப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாத வருவாய் டெபாசிட் செய்யப்படும்.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்ததை போல மகாராஷ்டிரத்திலும் பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடி செய்யப்படும். ஆட்சிக்கு வந்த 10 நாளில் இதை செய்வோம்.

மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பிரதமரை என்னிடம் 5 நிமிடம் பேச விடுங்கள். நான் கேட்கிற கேள்விக்கு அவர் நாட்டை விட்டு ஓடி விடுவார் என பகிரங்கமாக கூறினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரிகள் சுஷில் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட், வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #RahulGandhi

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story