search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற நிலைக்குழு டுவிட்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    பாராளுமன்ற நிலைக்குழு டுவிட்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

    பாராளுமன்ற நிலைக்குழு ‘டுவிட்டர்’ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. #ElectionCommission #Twitter #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் பல கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.



    நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சில பிரச்சினைகளை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். அதேபோல, தேர்தலை வலுவிழக்கச் செய்யும் பணிகளில் ஈடுபடுவதோ, தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டுவிட்டர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதர சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மார்ச் 6-ந் தேதி இந்த நிலைக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார். #ElectionCommission #Twitter #ParliamentaryPanel 
    Next Story
    ×