என் மலர்
செய்திகள்

விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோய் நீக்கம் - சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
இந்தியாவின் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #leprosyground #groundfordivorce
புதுடெல்லி:
மலட்டுத்தன்மை மற்றும் தீராத நோய் பாதிப்புகள் ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.
இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.
அவ்வகையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் 1-7-2018 அன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் ஏதுமின்றி ஒருமனதாகநிறைவேறியது. எனவே, இனி தொழுநோயாளி என்று காரணம் காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து வழக்கு தொடர முடியாது.
எனினும், ஏற்கனவே பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. #PersonalLawsAmendmentBill #RajyaSabha #leprosyground #groundfordivorce

Next Story