என் மலர்

  செய்திகள்

  மன்மோகன்சிங் வெற்றிகரமான பிரதமர் - சிவசேனா புகழாரம்
  X

  மன்மோகன்சிங் வெற்றிகரமான பிரதமர் - சிவசேனா புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மன்மோகன்சிங் ‘ஆக்சிடென்டலாக’ வந்தவர் அல்ல என்றும், ‘வெற்றிகரமான பிரதமர்’ என்றும் சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.#ShivSena #ManmohanSingh
  மும்பை:

  தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் ‘தி ஆக்சிடென்டல் பிரதம மந்திரி’ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

  இதில் பா.ஜனதா ஆதரவாளரான அனுபம்கெர் மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

  ‘‘ஆக்சிடென்டல் பிரதமர்’ படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆனாலும் வருகிற 11-ந் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

  இதுகுறித்து அந்த கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே அவர் தற்செயலாக திடீரென பொறுப்புக்கு வந்த பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன்.

  நரசிம்மராவுக்கு பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்று இருக்கிறது என்றால் அவர் மன்மோகன்சிங் தான்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நரசிம்மராவுக்கு பின்னர் மன்மோகன்சிங் தான் வெற்றிகரமான பிரதமர் என்று தெரிவித்ததன் மூலம் மோடியை சிவசேனா சீண்டி பார்த்துள்ளது. #ShivSena #ManmohanSingh

  Next Story
  ×