என் மலர்

  செய்திகள்

  மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது- அமித் ஷா ஆவேசம்
  X

  மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது- அமித் ஷா ஆவேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது என அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #BJPyatra #WestBengalBJPyatra #AmitShah
  புதுடெல்லி:

  மேற்கு வங்காளம் மாநிலத்தில் மூன்று ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, திட்டமிட்டுள்ளார். இதில் முதல் யாத்திரை கூச்பெகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.
   
  ஆனால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி அளிக்க மாநில அரசு மறுத்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து அம்மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.  இவ்வழக்கில் தீர்ப்பளித்த கொல்கத்தா ஐகோர்ட், பா.ஜ.க. ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

  இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி எல்லா ரத யாத்திரைகளையும் நாங்கள் நடத்தியே தீருவோம் என தெரிவித்துள்ளார்.


  இன்று நடைபெறவிருந்த ரத யாத்திரை நிகழ்ச்சி ரத்து செய்யப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவதாக குறிப்பிட்டார்.

  நாட்டிலேயே அரசியல்சார்ந்த கொலைகளில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் இருப்பதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, ஜனநாயகரீதியான யாத்திரைகளுக்குகூட தனது அதிகாரத்தை பயன்படுத்தி  மம்தா பானர்ஜி தடை விதிப்பதாகவும் தெரிவித்தார். #BJP #BJPyatra #WestBengalBJPyatra #AmitShah
  Next Story
  ×