search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநில தேர்தலில் 4-ல் வெற்றி பெறுவோம்- மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்
    X

    5 மாநில தேர்தலில் 4-ல் வெற்றி பெறுவோம்- மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    5 மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் நாங்கள் 4 மாநிலங்களில் வெற்றி பெறுவோம். ராஜஸ்தானில் நான் பெரும்பாலான இடங்களில் பிரசாரம் செய்தேன். அங்கு பா.ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால்தான் மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகானும், சத்தீஷ்கரில் ராமன்சிங்கும் தொடர்ந்து ஆட்சி அமைப்பார்கள். 4-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதனை படைப்போம்.

    வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான மனநிலையில் உள்ளனர். நாட்டின் புகழ்பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    Next Story
    ×