என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் - கேரள அரசு யோசனை
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் - கேரள அரசு யோசனை

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் என்று ஐகோர்ட்டில் கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.



    அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

    இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்” என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.  #SabarimalaTemple #KeralaGovernment
     
    Next Story
    ×