என் மலர்
செய்திகள்

திருவனந்தபுரம் அருகே தாய், மகளை கற்பழித்த கும்பல்
திருவனந்தபுரம் அருகே தாய், மகளை கற்பழித்த சம்பவம் குறித்து மர்ம கும்பலை போலீசார் தீவிரமா தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 40 வயது தாயும், 18 வயது மகளும் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு வேறு யாரும் துணை கிடையாது என்பதால் அந்த வீட்டில் தனியாக காலம் தள்ளி வந்தனர். மேலும் தாயும், மகளும் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் அடிக்கடி சென்று வந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் தாயையும், மகளையும் பாலியல் கொடுமை செய்தது தெரிய வந்தது.
உடனே பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அந்த வாலிபரை பிடித்து தாக்கினார்கள். ஆனால் அவர், பொதுமக்கள்பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட தாய்-மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தனியாக தாயும், மகளும் இருப்பதை நோட்டமிட்டு அந்த வாலிபரை போல மேலும் சிலர் அவர்களை கற்பழித்தது தெரிய வந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #molestation

Next Story