என் மலர்

  செய்திகள்

  வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காட்சி
  X
  வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காட்சி

  சத்தீஷ்கர் முதல்-மந்திரிக்கு எதிராக போட்டி- வாஜ்பாய் மருமகள் வேட்பு மனு தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஷ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்குக்கு எதிராக வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #BJP #Congress #KarunaShukla
  ராய்ப்பூர்:

  பா.ஜனதா ஆட்சி நடைபெறும் சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மக்கள் செல்வாக்கால் அசைக்க முடியாத முதல்- மந்திரியாக திகழும் ராமன் சிங்குக்கு இந்த தேர்தல் சவாலாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  இதற்கு காரணம் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அதிகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது.

  முதல்-மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா நிறுத்தப்பட்டார். 3 முறை தொடர்ந்து முதல்- மந்திரியாக இருந்து வரும் ராமன்சிங் 4-வது முறையாக தனது ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சுக்லா போட்டியிடுகிறார்.

  நேற்று ராஜ்நந்த்கான் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முதல்- மந்திரி ராமன்சிங் மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  அவர் மனுதாக்கல் செய்ததும் வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கருணா சுக்லா மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். அவருக்கு வயது 68.

  இவர் வாஜ்பாயின் மூத்த சகோதரர் மகள் ஆவார். 1980-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவில் கட்சி பணியாற்றினார்.

  ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலோடா பஜார் சட்டசபை தொகுதியில் 1993-ம் ஆண்டு பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  சத்தீஷ்கர் மாநில பிரிவினைக்குப்பின் 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜஞ்ச்கிர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அடுத்து 2009-ல் கொர்பா தொகுதியில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார்.

  அதன்பிறகு கருணா சுக்லா பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிலாஸ்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.

  பின்னர் ஒதுங்கி இருந்த கருணா சுக்லா தற்போது மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக முதல்-மந்திரி ராமன்சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

  சத்தீஷ்கரில் ராமன்சிங் தான் முதல்-மந்திரி பதவிக்கு பொறுத்தமானவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அவரை எதிர்த்து போட்டியிட கருணா சுக்லா தகுதியான தலைவர் இல்லை என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஸ்ரீவத்சவ் கூறினார். #BJP #Congress #KarunaShukla
  Next Story
  ×