என் மலர்
செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் ஜல்லிக்கட்டு பாணியில் அவசர சட்டம் - மத்திய அரசுக்கு எம்.பி. வலியுறுத்தல்
சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கட்டுப்படுத்த ஜல்லிக்கட்டு பாணியில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பத்தனம்திட்டா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #Sabarimalaissue #Sabarimalaordinance
திருவனந்தபுரம்:
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கட்டுப்படுத்த ஜல்லிக்கட்டு பாணியில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதி எம்.பி. ஆன்ட்டோ ஆன்ட்டனி இன்று வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மகளிர் அணியின் சார்பில் இன்று எரிமேலி பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

துலாம் மாத சிறப்பு பூஜைக்காக நாளை (17-ம் தேதி) சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் தற்போது சர்ச்சைகளின் நிழலில் சிக்கியுள்ளது எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் இந்த தீர்ப்பை இதர மதங்களை சேர்ந்தவர்களும் எதிர்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு யாத்திரை வரும் கோடிக்கணக்கான பக்தர்களை வரவேற்க வேண்டிய இந்த நேரத்தில் எங்கு பார்த்தாலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராடி வருவதைதான் தற்போது பார்க்க முடிகிறது.
ஐயப்பனின் சரணகோஷத்துக்கு பதிலாக இப்போது எங்கு பார்த்தாலும் மக்களின் போராட்டக் குரலைத்தான் கேட்க முடிகிறது.
நைஷ்ட்டிக பிரம்மச்சாரியான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தீர்ப்பின்படி அனைத்து வயதுடையை பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவசர சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியை நான் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட தடையை பாராளுமன்றம் இயற்றிய அவசர சட்டம் முறியடித்தது. பின்னர், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டமும் உருவாக்கப்பட்டது.
இதேபோல், சபரிமலை ஐய்யப்பன் கோயில் விவகாரத்திலும் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றினால்தான் இங்கு போராட்டங்கள் இல்லாத இயல்புநிலை ஏற்பட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimalaissue #Sabarimalaordinance
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கட்டுப்படுத்த ஜல்லிக்கட்டு பாணியில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதி எம்.பி. ஆன்ட்டோ ஆன்ட்டனி இன்று வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மகளிர் அணியின் சார்பில் இன்று எரிமேலி பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற பத்தனம்திட்டா தொகுதியின் பாராளுமன்ற மக்களவை உறுப்பினரான ஆன்ட்டோ ஆன்ட்டனி கூறியதாவது:-

Next Story