search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஒன்றரை கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல்
    X

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஒன்றரை கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    மேற்கு வங்காள மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இருவேறு எல்லைப்பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் எடை ஒன்றரை கிலோவுக்கும் அதிகமானதாக உள்ளது. #WestBengal
    கொல்கத்தா:

    வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் வழியாக தங்கம், போதை மருந்துகள் போன்றவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்துவருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமுதியா எல்லைப்பகுதியில் இருந்து 384.325 கிராம் கடத்தல் தங்கத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 12 லட்சத்து 33 ஆயிரத்து 684 என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதேபோல், கோஜடாங்கா எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 39 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை ஆயிரத்து 300 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #WestBengal
    Next Story
    ×