search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரிகிறதா மோடி சாம்ராஜ்யம்? - ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கரில் பாஜகவை காங். வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..
    X

    சரிகிறதா மோடி சாம்ராஜ்யம்? - ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கரில் பாஜகவை காங். வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும் என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. #5StatesElection #BJP #Congress
    புதுடெல்லி :

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15-ம் தேதியும் நிறைவடைகிறது.

    மேலும், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

    இதனிடையே, நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெரும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதனடிப்படையில்,  200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு  2 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது

    ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது, இங்கு காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் வெற்றி பெற்றால் அது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.

    சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது, இங்கு உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெரும் எனவும் மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று மாநிலங்களில் ராஜஸ்தானை தவிற மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஒருவேலை இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியின் செல்வாக்கு மீது கேள்வி எழுப்பட்டு அது அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



    அதேசமயம், பணமதிப்பிழப்பு, தினம்தினம் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை பாஜகவின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்து கணிப்பு சொலிகிறது. அதனால், இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. #5StatesElection #BJP #Congress
    Next Story
    ×