என் மலர்
செய்திகள்

தெலுங்கானா- பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. #Telangana #BusAccident
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்டமாக தகவல் வெளியானது. விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. #Telangana #BusAccident
Next Story






