search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பாரம்பரிய அந்தஸ்து பறிபோனால் என்ன செய்வீர்கள்? தாஜ்மகால் பராமரிப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
    X

    உலக பாரம்பரிய அந்தஸ்து பறிபோனால் என்ன செய்வீர்கள்? தாஜ்மகால் பராமரிப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

    தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருகிறது.

    சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கருத்து தெரிவித்தது. தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கூறியது.



    இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது ஏற்கனவே உத்தரவிட்டபடி, தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

    தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படாதது கண்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    அப்போது அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “யுனஸ்கோவின் உலக பாரம்பரிய மையம் பாரீசில் இருக்கிறது. தாஜ்மகால் பாதுகாப்பு நிர்வாக திட்டத்தை அங்கு தாக்கல் செய்கிறீர்களா? இதை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”என காட்டமாக கேட்டனர்.

    மேலும் தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #TajMahal #SupremeCourt #Tamilnews
    Next Story
    ×