என் மலர்
செய்திகள்

ஆர்டிஓ அதிகாரிகளை கண்டதும் 48 மாணவர்களை தவிக்க விட்டு ஓட்டமெடுத்த பஸ் டிரைவர்
48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.
இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது.
Next Story






