என் மலர்
செய்திகள்

பயங்கரவாதத்தைவிட அதிகம் உயிர்ப்பலி வாங்கும் பராமரிப்பற்ற சாலைகள் - சுப்ரீம் கோர்ட் வேதனை
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட முறையற்ற சாலைகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SC #PotholeDeaths
புதுடெல்லி:
சமீபகாலங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களினால் ஏற்படும் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மும்பையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்திலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.
மேலும், சமீபத்திய ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட பராமரிக்கப்படாத சாலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சாலை பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்ற குழு இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #SC #PotholeDeaths
சமீபகாலங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களினால் ஏற்படும் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மும்பையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்திலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மோசமான சாலைகளினால் தங்கள் உயிரை இழந்தவர்களுக்கு நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, சாலை பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்ற குழு இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #SC #PotholeDeaths
Next Story