search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் கருணை மதிப்பெண் - சென்னை மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
    X

    நீட் தேர்வில் கருணை மதிப்பெண் - சென்னை மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    நீட் வினாத்தாள் குளறுப்படியால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மதுரை கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். #NEET2018
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவு தேர்வை (நீட்) 24,000 மாணவர்கள் எழுதினர். இதில் தமிழ் வினாத்தாளில் மொழி பெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநலன் மனுதாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமத் ஆகியோர் விசாரித்தனர். தமிழ் வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், புதிதாக நீட் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் வேண்டும் என்று மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.க்கு கடந்த 10-ந்தேதி உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.


    இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை மாணவர் சத்யாதேவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    மாணவர் சத்யாதேவர் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதினார். இவருக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவால் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்ற தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறார்.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் நாளை அவரது மேல்முறையீடு மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 24,000 மாணவர்கள் தமிழில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். மாநில ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,328 இடங்கள் உள்ளன. இதில் 516 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகிறது. தற்போது முதல் சுற்றில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2447 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #NEET2018
    Next Story
    ×