என் மலர்
செய்திகள்

X
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தெலுங்கானா மாணவரின் தந்தைக்கு சுஷ்மா ஆறுதல்
By
மாலை மலர்8 July 2018 5:25 PM IST (Updated: 8 July 2018 5:25 PM IST)

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுப்போம் என சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
புதுடெல்லி:
அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் உள்ள மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு (25) அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமையில் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபரால் சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க வலை வீசிவரும் அந்நாட்டு காவல்துறை, குற்றவாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய மாணவர் சரத் கொப்புவின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தார் அமெரிக்கா செல்ல விரும்பினால் அதற்கான விசா ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், மேலும், மாணவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj

இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி, அம்மாநில அரசின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை மந்திரி கே.டி. ராமா ராவ் மற்றும் ஆகியோர் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Next Story
×
X