search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ரூபாய் பாப்கார்ன் 250 ரூபாய் -  புனேயில் தியேட்டர் மேனஜருக்கு தர்மஅடி - வீடியோ
    X

    5 ரூபாய் பாப்கார்ன் 250 ரூபாய் - புனேயில் தியேட்டர் மேனஜருக்கு தர்மஅடி - வீடியோ

    புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றில் 5 ரூபாய் பாப்கார்னை 250 ரூபாய்க்கு விற்பதாக கூறி தியேட்டர் மேனஜரை நவநிர்மான் சேனா தொண்டர்கள் அடித்து, உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#MNS #Pune
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டங்களின் விலை தாறுமாறாக உள்ளதாக கூறி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், புனே நகரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் இன்று நேற்று புகுந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், உணவுப்பொருட்களின் விலையை குறைக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் ஏன் குறைக்கவில்லை என தியேட்டர் மானேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொண்டர்கள் மானேஜரை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதல் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் நிர்வாகி கிஷோர் ஷிண்டே, “5 ரூபாய் பாப்கார்ன் 250 ரூபாய்க்கு விற்கின்றனர். ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டினால், அதற்கு, மராத்தி தெரியாததால் பேப்பர் படிக்கவில்லை என மானேஜர் கூறினார். இதனால், எங்களது ஸ்டைலில் இந்த விஷயத்தை டீல் செய்தோம்” என கூறினார். 


    Next Story
    ×