search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் - தேவேந்திர பட்னாவிஸ் புறப்பட்டு சென்றார்
    X

    அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் - தேவேந்திர பட்னாவிஸ் புறப்பட்டு சென்றார்

    அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒருவார பயணமாக முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று புறப்பட்டு சென்றார். #MaharashtraCM
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார்.

    அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

    மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர், கனடா நாட்டின் மான்ட்ரியல் நகருக்கு செல்லும் பட்னாவிஸ், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறைகளில் செயற்கை நுன்னறிவை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews #MaharashtraCM
    Next Story
    ×