என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோராவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் ஹஜ்ஜன் காவல் நிலையம் அருகில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்த ராணுவ முகாம் மீது கையெறி குண்டுகளை வீசினர். அதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Next Story






