என் மலர்

  செய்திகள்

  பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் - சுஷ்மா சுவராஜ்
  X

  பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் - சுஷ்மா சுவராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையில் கொண்டப்படும் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
  புதுடெல்லி:

  மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு  துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு பின் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.

  அதைத்தொடர்ந்து, இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

  உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உதவி செய்வதே எனது வாழ்நாள் இலக்காக கொண்டுள்ளேன் எனவும் சுஷ்மா தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Tamilnews
  Next Story
  ×