என் மலர்
செய்திகள்

மூட்டுவலி அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றாரா யோகா குரு பாபா ராம்தேவ்?
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மூட்டுவலி அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக சில நாட்களாக தகவல்கள் பரவிய நிலையில், பதஞ்சலி நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. #BabaRamdev
புதுடெல்லி:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மூட்டுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. யோகா செய்தால் மூட்டுவலியே வராது என கூறிக்கொண்டு அவர் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் சென்றுள்ளார் என பலர் ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ராம்தேவ் வெளிநாடு எங்கும் செல்லவில்லை. ஹரித்துவாரில் நடக்க உள்ள ஐந்து நாள் முகாமுக்கு தேவையான வேலைகளை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் என பதஞ்சலி நிறுவனம் மேற்கண்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. #BabaRamdev
Next Story