என் மலர்

  செய்திகள்

  விவசாயிகள் கடன் விவகாரத்தில் மோடி பெயில் ஆகிவிட்டார் - ராகுல் டுவிட்டரில் தாக்கு
  X

  விவசாயிகள் கடன் விவகாரத்தில் மோடி பெயில் ஆகிவிட்டார் - ராகுல் டுவிட்டரில் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் விவசாயிகள் கடன் விவகாரத்தில் மோடி பெயிலாகிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டவில் கடுமையாக தாக்கி உள்ளார். #RahulGandhi #Modi
  பெங்களூர்:

  கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல சமூக வலைதளங்களிலும் பிரசாரமும், கருத்து மோதலும் இருந்து வருகிறது.

  இந்த நிலையில் கர்நாடகாவில் விவசாயிகள் கடன் விவகாரத்தில் மோடி பெயிலாகிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டவில் கடுமையாக தாக்கி உள்ளார். மோடியின் பா.ஜனதா அரசு கர்நாடகா மாநிலத்துக்கு என்ன செய்து இருக்கிறது என்று அவர் பட்டியலிட்டு இருக்கிறார்.

  ராகுல் காந்தி தனது டுவிட்டரில் மோடிக்கு மார்க் கொடுத்து ரேங்க் கார்டு அளித்துள்ளார். அந்த டுவிட்டரில் ராகுல் காந்தி கூறி இருப்பதாவது:-

  மோடியின் ரேங்க் அட்டை மாநிலம் கர்நாடகா, பிரிவு, விவசாயம் ரூ.8,500 கோடி கடன் தள்ளுபடி என்று கூறி ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை.

  பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைத்துள்ளது. கர்நாடகா விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி+50 சதவிகிதத்தில் சலுகையும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் மோடியின் மத்திய அரசுக்கு ‘எப்’ கிரேடு என்று பெயில் கிரேடு கொடுத்துள்ளார்.

  இவ்வாறு டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Modi
  Next Story
  ×