என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் சாதனைகளுக்கு மோடி அரசு சொந்தம் கொண்டாடுகிறது: ராகுல்காந்தி கிண்டல்
  X

  காங்கிரஸ் சாதனைகளுக்கு மோடி அரசு சொந்தம் கொண்டாடுகிறது: ராகுல்காந்தி கிண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளுக்கு தற்போதைய மத்திய அரசு போலியாக சொந்தம் கொண்டாடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். #RagulGandhi #Modi
  புதுடெல்லி:

  வாக்குறுதி அளித்தபடி நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களில் மின்சார வசதி என்ற நிலையை எட்டி உள்ளோம் என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் பெருமிதத்துடன் அறிவித்து இருந்தார்.

  இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளுக்கு தற்போதைய மத்திய அரசு போலியாக சொந்தம் கொண்டாடுகிறது” என்றார்.

  முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், “2004-2014-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லட்சக்கணக்கான கிராமங்களுக்கு மின்சார வசதி அளித்தது. ஆனால் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தியதை மிகப் பெரியதொரு சாதனையாக மோடி கூறுகிறார்” என்று கேலி செய்தார்.

  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “நாட்டில் 6,49,867 கிராமங்கள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 60 ஆண்டுகளில், ஆண்டுக்கு தலா 10 ஆயிரம் கிராமங்கள் வீதம் மின்வசதி வழங்கப்பட்டு உள்ளது. மோடியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் ஆண்டுக்கு 4,813 கிராமங்களுக்குத்தான் மின்வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.  #RagulGandhi #Modi  #tamilnews
  Next Story
  ×