என் மலர்
செய்திகள்

அம்பேத்கரும், மோடியும் பிராமணர்கள்: சபாநாயகரின் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
அம்பேத்கரும், மோடியும் பிராமணர்கள் என கூறிய குஜராத் சபாநாயர் ராஜேந்திர திரிவேதி கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆமதாபாத்:
குஜராத்தின் காந்தி நகரில் நேற்றுமுன்தினம் நடந்த பிராமண வர்த்தக மாநாட்டில் மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், ‘அம்பேத்கரை ஒரு பிராமணர் என்று சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனெனில் அவரது குடும்ப பெயர் பிராமண குடும்ப பெயராகும். இது ஒரு பிராமண ஆசிரியரால் வழங்கப்பட்டது’ என்றார். கற்றோரை பிராமணர் என அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய ராஜேந்திர திரிவேதி, அந்தவகையில் பிரதமர் மோடி கூட ஒரு பிராமணர்தான் என்றும் தெரிவித்தார்.
திரிவேதியின் இந்த கருத்து மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தலித் மக்களின் ஓட்டுகளுக்காக மட்டுமே பா.ஜனதாவும், அதன் தலைவர்களும் அம்பேத்கரை நினைவுகூர்வதாகவும், அம்பேத்கர் போன்ற ஒரு மிகப்பெரிய தலைவர் குறித்து பொறுப்பற்ற கருத்துகளை கூறி வருவதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதைப்போல குஜராத் தலித் இனத்தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானியும் ராஜேந்திர திரி வேதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Next Story