என் மலர்

  செய்திகள்

  உ.பி.யில் நின்ற லாரி மீது பயணிகள் வாகனம் மோதி விபத்து- 9 பேர் உயிரிழப்பு
  X

  உ.பி.யில் நின்ற லாரி மீது பயணிகள் வாகனம் மோதி விபத்து- 9 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில் நின்றுகொண்டிந்த லாரி மீது பயணிகள் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.#UPaccident
  லகிம்பூர்:

  உத்தர பிரதேசத்தில் லகிம்பூர் கேரி அருகே உள்ள உச்சாவ்லியா என்ற இடத்தில் சரக்கு ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அந்த வழியாக 16 பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வாகனம், கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது.

  இந்த விபத்தில் பயணிகள் வாகனத்தின் டிரைவர் அனுப் அஸ்வதி(25), உதவியாளர் கிஷன் (23) உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு ஷாஜகான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  விபத்து குறித்து பஸ்கவான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர். டிரைவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் கருதுகின்றனர்.#UPaccident
  Next Story
  ×