என் மலர்

  செய்திகள்

  பினராயி விஜயன் தலை துண்டிக்கப்படும் - மாவோயிஸ்ட்கள் மிரட்டலால் பரபரப்பு
  X

  பினராயி விஜயன் தலை துண்டிக்கப்படும் - மாவோயிஸ்ட்கள் மிரட்டலால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல் மந்திரி பினராயி விஜயனின் தலை துண்டிக்கப்படும் என்ற போஸ்டரை ஒட்டி மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Pinarayiviyajan
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் பினராயி விஜயன். இவர் ஆதிவாசிகள் மீது அக்கறை கொள்ளாதவர் என்பதை வலியுறுத்தும் விதமாக பாலக்காடு மாவட்டம் பழையானூர் பகுதியில் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், பினராயி விஜயனின் தலை துண்டிக்கப்படும் என அச்சிடப்பட்டுள்ளது.
    
  மேலும் அதில், ஆதிவாசிகளுக்கு அனைத்து பொருள்களும் உரிய முறையில் கிடைப்பதில்லை. மது என்ற ஆதிவாசியை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். மாநில அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆதிவாசிகள் மீது அக்கறை இல்லாத பினராயி விஜயன் தலை துண்டிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

  இதுதொடர்பாக யாரும் புகார் தராத நிலையில் பழையானூர் போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவை சேர்ந்த நக்சல்பாரி இயக்கத்தினர் இந்த கொலை மிரட்டலை விடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pinarayiviyajan #Tamilnews
  Next Story
  ×