search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய அரசியலில் மூன்றாவது அணி - 29-ம் தேதி தெலுங்கானா முதல்வருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
    X

    தேசிய அரசியலில் மூன்றாவது அணி - 29-ம் தேதி தெலுங்கானா முதல்வருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

    தேசிய அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டிவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 29-ம் தேதி சந்திக்கிறார். #FederalFront #ChandrasekharRao #MKStalin #meet
    ஐதராபாத்:

    தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார்.

    தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநில கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மத்திய அரசுடன் பலமான நட்புறவுக்கு தி.மு.க. எப்போதுமே துணையாக நின்றுள்ளது. பா.ஜ.க.வின் சர்வாதிகார - ஜனநாயகவிரோத ஆட்சிக்கு எதிடாக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் பெருமுயற்சிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்திருந்தார். எங்களது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டிவரும் 29-ம் தேதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 29-ம் தேதி சந்திக்கிறார். இந்த தகவலை தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் 17-ம் ஆண்டு விழாவில் சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்டார்.

    தேசிய அரசியலில் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள் ஏற்கனவே தன்னை சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். #FederalFront #ChandrasekharRao #MKStalin #meet 
    Next Story
    ×