என் மலர்
செய்திகள்

பினாமி சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் மகனின் தொழிற்சாலை நிலம் முடக்கம்
புதுடெல்லி:
முன்னாள் ரெயில் மந்திரியும், முன்னாள் பீகார் முதல்-மந்திரியுமான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் மீது ரெயில்வே ஓட்டல் குத்தகை முறைகேடு வழக்கு பினாமி சொத்துக்கள் வழக்குகளையும் சி.பி.ஐ. மற்றும் வருமானவரித்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மகள் மிசாபாரதியிள் ரூ.100 கோடி மதிப்புள்ள டெல்லி பங்களா முடக்கப்பட்டடது.
இதற்கிடையே லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான நிலம் பாட்னா அருகே ஷேக்புராவில் உள்ளது. தொழிற்சாலை கட்டுவதற்காக இந்த நிலம் வாங்கி போடப்பட்டது. 7,105 சதுரடி பரப்பளவு கொண்ட இந்த நிலத்தின் மதிப்பு பலகோடியாகும்.
லாலு குடும்பத்தினரின் சொத்துக்களை மதிப்பிட்டு வரும் வருமானவரி துறை அதிகாரிகள் முதல் கட்டமாக ஷேக்புராவில் உள்ள நிலத்தை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி உத்தரவிட்டனர். #LaluPrasadYadav #FodderScamVerdict