என் மலர்

  செய்திகள்

  திருப்பதி கோவிலில் காணிக்கை தலைமுடி திருடிய 3 பெண் ஊழியர்கள் சிக்கினர்
  X

  திருப்பதி கோவிலில் காணிக்கை தலைமுடி திருடிய 3 பெண் ஊழியர்கள் சிக்கினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை திருடிச் சென்ற 3 பெண் துப்புரவு ஊழியர்கள் சிக்கினர்.
  திருமலை:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை திருமலையில் உள்ள முதன்மைக் கல்யாண கட்டா, மினி கல்யாண கட்டாக்களில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

  பக்தர்களின் காணிக்கை தலைமுடி சேகரிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அதனை சுத்தம் செய்து நீளம், நிறத்தின் அடைப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

  திருமலையில் உள்ள ஒரு மினி கல்யாண கட்டாவில் இருந்து பக்தர்களின் காணிக்கை தலைமுடியை, அங்கு வேலை பார்க்கும் பெண் துப்புரவு ஊழியர்கள் பைகளில் வைத்து திருடிச் செல்வதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உதவி பறக்கும் படை அதிகாரி ரவீந்திரா, சப்தகிரி மினி கல்யாண கட்டா பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

  மேற்கண்ட மினிகல்யாண கட்டாவில் வேலை பார்க்கும் பெண் துப்புரவு ஊழியர்களான கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கனகவள்ளி, சுப்பம்மாள், சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி ஆகிய 3 பேர் வேலை முடிந்து, தங்களின் பைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டனர்.

  அந்தப் பெண் துப்புரவு ஊழியர்களை தடுத்து நிறுத்திய அதிகாரி ரவீந்திரா, அவர்கள் எடுத்துச்சென்ற பைகளை வாங்கி பார்த்தபோது, அதில் பெண்கள் காணிக்கையாக செலுத்திய நீளமான தலைமுடியை திருடி வைத்துக்கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.

  இதையடுத்து 3 பெண் துப்புரவு ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அவர்கள் 3 பேரும், திருமலை போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரி கூறினார். அவர்களிடம் இருந்து காணிக்கை தலைமுடி பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
  Next Story
  ×