என் மலர்

  செய்திகள்

  2 வயது மகனை தலைகீழாக பிடித்து தார்ரோட்டில் அடித்த தந்தை
  X

  2 வயது மகனை தலைகீழாக பிடித்து தார்ரோட்டில் அடித்த தந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலத்தில் மனைவியை கொலை செய்யும் போது தப்பியதால் ஆத்திரமடைந்த கணவர் தனது 2 வயது மகனை தலைகீழாக பிடித்து ரோட்டில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் பத்தினம் திட்டா மூலியார் 40 ஏக்கரர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவரது மனைவி சுதா (22). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளான்.

  சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வினோத் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இது சுதாவுக்கு தெரிந்துவிட்டது. இதனையடுத்து மகனை தூக்கிக்கொண்டு வனப்பகுதியில் தப்பிச்செல்ல வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள பஸ் நிலையத்திற்கு இரவு வந்தார். நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை.

  இந்நிலையில் வினோத் அங்கு வந்தார். அதிர்ச்சியடைந்த சுதா மகனை தனது கணவரிடம் கொடுத்து விட்டு வனப்பகுதிக்குள் தப்பிச்சென்று விட்டார். மனைவி தப்பிய ஆத்திரத்தில் மகனை தலைகீழாக சுழற்றி காலை பிடித்து தார்சாலையில் ஓங்கி அடித்தார்.

  இதைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடிவருவதை பார்த்த வினோத் தப்பினார். ரோட்டில் படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டு அங்குள்ள சீதாதோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தையின் மண்டை ஓடு உடைந்து விட்டது. மேலும் கைகள் முறிந்து விட்டது என்று கூறினர். இதனையடுத்து குழந்தைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் குழந்தையை ரோட்டில் வீசி அடித்த தந்தையை கைது செய்ய மூலியார் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய தாய் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இது குறித்து மூலயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  Next Story
  ×