என் மலர்
செய்திகள்

அஜீத்சிங்
பா.ஜனதாவுக்கு வாக்களித்த 2 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் - அஜீத்சிங் நடவடிக்கை
மாநிலங்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்த 2 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 10 எம்.பி.க்களை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜனதா 9 வேட்பாளர்களை நிறுத்தியது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு வேட்பாளரையும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு வேட்பாளரையும் நிறுத்தினர். இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்.களின் எண்ணிக்கை அடிப்படையில் 8 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
அங்கு 10 பேரை தேர்வு செய்ய 11 பேர் போட்டியிட்டதால் தேர்தலில் பரபரப்பு உருவானது. இதில் பா.ஜனதா 9 பேரை தேர்வு செய்ய அந்த கட்சிக்கு கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை ஆதரிக்க இருந்த 2 எம்.எல்.ஏ.க்கள் கடைசி நேரத்தில் கட்சி மாறி பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர். இதனால் பா.ஜனதாவின் 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
ஒரு சமாஜ்வாடி வேட்பாளரும் வெற்றி பெற்றார். ஆனால் மாயாவதி கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். அது அந்தக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
மாயாவதி கட்சி வேட்பாளரை அஜீத் சிங்கின் ராஷ்ட்டீரிய லோக் தளத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும், நிஷாத் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வும் ஆதரிப்பதாக முடிவு செய்து இருந்தனர். கடைசி நேரத்தில் இருவரும் கட்சி கட்டளையை மீறி வாக்களித்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராஷ்டீரிய லோக்தளம் எம்.எல்.ஏ. ஷகேந்தர்சிங் சவுகானை நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அஜீத்சிங்கும், நிஷாத் கட்சி எம்.எல்.ஏ. விஜய்மிஸ்ராவை நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Next Story