என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ஜார்க்கண்ட்டில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நக்சலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
  ராஞ்சி:

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், பாலமு மாவட்டம் நவ்திகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மற்றும் மாநில போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது.

  இந்த சண்டையில் இரண்டு பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சண்டை முடிவடைந்ததும் நடந்த தேடுதல் வேட்டையின்போது இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. #tamilnews
  Next Story
  ×