என் மலர்

  செய்திகள்

  தெலுங்கானாவில் வேலையில்லா திண்டாட்டம்: போலீஸ் வேலைக்கு தேர்வான என்ஜினீயரிங் பட்டதாரிகள்
  X

  தெலுங்கானாவில் வேலையில்லா திண்டாட்டம்: போலீஸ் வேலைக்கு தேர்வான என்ஜினீயரிங் பட்டதாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக போலீஸ் வேலை பணிக்கு என்ஜினீயரிங் முடித்த பட்டதாரி வாலிபர்கள் தேர்வாகி உள்ளனர்.
  அடிலாபாத்:

  தெலுங்கானா மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் பலர் விவசாயத்தையும், சுய தொழிலையும் கைவிட்டு என்ஜினீரியங் பட்டதாரிகளாகவும், எம்.டெக், எம்.சி.ஏ., பட்டதாரிகளாகவும் பி.பாம் பட்டதாரிகளாகவும் படித்து தேறியுள்ளனர்.

  பட்டதாரிகள் நிறைய உருவானதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். மேலும் குறைந்த சம்பளத்துக்கு பணியில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10,000 போலீஸ்காரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை மாநில காவல்துறை வெளியிட்டது. வேலையின்றி தவித்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தனர். அவர்கள் தேர்வு எழுதி நேர்முக தேர்விலும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான பட்டதாரிகள் போலீஸ் வேலைக்கு தேர்வாகி பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

  ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்வான 243 போலீஸ்காரர்களுக்கு அடிலாபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் 24 பேர் பட்டதாரிகள், 5 பேர் எம்.டெக் படித்தவர்கள், 6 பேர் எம்.சி.ஏ. பட்டம் பெற்றவர்கள், 7 பேர் எம்.பி.ஏ. பட்டமும், 47 பேர் பி.டெக் பட்டமும், 18 பேர் பி.பாம் பட்டமும் பெற்றவர்கள், 100 பேர் இதர பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதை விட போலீஸ்காரர் பணி அரசு துறை என்பதால் பணி பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் வேலையில்லா திண்டாட்டத்துக்கும் தீர்வு கிடைப்பதால் பட்டதாரிகள் போலீஸ் வேலைக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் படையில் 50 சதவீதம் பேர் பட்டதாரிகளாக உள்ளனர். இது நல்ல முன்னேற்றம் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

  என்ஜினீயரிங் பட்டதாரிகள், நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதால் அவர்களை போலீஸ் சைபர் கிரைமுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கரீம்நகர் டி.ஐ.ஜி. பிரமோத்குமார் தெரிவித்தார்.
  Next Story
  ×