search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயா சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்
    X

    மேகாலயா சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்

    மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார் என மாநில காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
    ஷில்லாங்:

    மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார் என மாநில காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

    60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் அடுத்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மேகாலயாவின் ஷாங்சக் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரும், முதல் மந்திரியுமான முகுல் சங்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கிறார் என மாநில காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக கட்சி தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக மேகாலயா வருகிறார். ஜோவாயில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். மேலும், பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். காஷி ஜெயின்தியா, கேரோ மலைப் பிரதேசங்களில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வரும் நிலையில், மேகாலயாவில் ஆட்சியை தக்கவைக்க ஒரு மாதத்துக்கு முன்பாகவே காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×