search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மேடையில் மயங்கி விழுந்து நாடக கலைஞர் பலி
    X

    கேரளாவில் மேடையில் மயங்கி விழுந்து நாடக கலைஞர் பலி

    கேரளா அருகே இரிஞாலகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடக கலைஞர் ஒருவர் மேடையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் செருதுறுத்தி அடுத்துள்ள புதுச்சேரியை சேர்ந்தவர் சீதானந்தன் (வயது 59). இவர் கேரள நாடக குழு கலா மண்டலம் அமைப்பின் ஓட்டம், துல்லல் நிகழ்ச்சியில் பிரபலமானவர்.

    தனது 8-வது வயதில் இருந்தே தனது தந்தை கேசவன் நம்பீசனிடம் இந்த நடனத்தை கற்று வந்தார். கேரள மாநிலம் முழுவதும் கோவில் நிகழ்ச்சியில் இவரது நடனம் புகழ்பெற்றது.

    நேற்று இரிஞாலகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு ஓட்டம், துல்லல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சீதானந்தன் தனது திறமைகளை மக்களுக்கு காட்டினார். இதை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

    அப்போது சீதானந்தனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு நாடக மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நாடக கலைஞர் சீதானந்தன் கேரள அரசின் பல்வேறு விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றவர். இது தவிர கமலதளம் என்ற சினிமா படம் உள்பட 32 சினிமாக்களிலும் நடித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×