என் மலர்

  செய்திகள்

  பக்கோடா விற்பது வேலை வாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்பா?: பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி
  X

  பக்கோடா விற்பது வேலை வாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்பா?: பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்கோடா விற்பது வேலை வாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதையும் வேலைவாய்ப்பாக கருதலாமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Modi #PChidambaram
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாரதிய ஜனதா ஆட்சியில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுத்திருப்பதாக கூறினார்.

  மேலும், ஒருவர் பக்கோடா விற்று அதில் 200 ரூபாய் லாபம் பெற்றாலும் அதுவும் வேலைவாய்ப்புதான் என்றும் மோடி கூறினார்.

  இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

  3 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. வேலை வாய்ப்புகளையே உருவாக்காமல் வளர்ச்சி என்று கூறிக்கொள்கிறார்கள்.

  பக்கோடா விற்று பிழைத்தால் அதுவும் வேலைவாய்ப்பு என்று கூறிஇருக்கிறார்கள். பக்கோடா விற்பது வேலைவாய்ப்பு என்று தர்க்கவாதமாக எடுத்துக் கொண்டால் பிச்சை எடுப்பது கூட வேலைவாய்ப்புதான். ஏழைகளும், இயலாதவர்களும் வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் அது வேலைவாய்ப்பு என்று கருத முடியுமா?

  பாரதிய ஜனதா வேலைவாய்ப்பு விவகாரத்தில் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சுய வேலைகளை வேலைவாய்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

  வேலைவாய்ப்பு என்றால் அதில் பாதுகாப்பு, விதிகள், நடைமுறைகள் என இருக்கும். இந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகளை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். முத்ரா அல்லது மைக்ரோ கடன்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியுமா?

  இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  இதுசம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ப. சிதம்பரம் தனது கருத்து மூலம் ஏழை மக்களையும், ஆதரவற்ற மக்களையும் அவமதித்திருக்கிறார். ஏழைகளை அவர் ஏளனம் செய்திருக்கிறார் என்று கூறினார். #Modi #PChidambaram #Pakodas
  Next Story
  ×