என் மலர்

  செய்திகள்

  மும்பை: ஆக்சிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்ற வாலிபர் அதில் சிக்கி பலி
  X

  மும்பை: ஆக்சிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்ற வாலிபர் அதில் சிக்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநிலத்தில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்ற வாலிபர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  மும்பை:

  மராட்டிய மாநிலத்தில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்ற வாலிபர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  மராட்டிய மாநிலம் மும்பையின் லால்பாக் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவர் மும்பை நாயர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்க்க நேற்று சென்றார்.

  அந்த சமயத்தில் அவரது உறவினருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அவருக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை தள்ளிக் கொண்டு ராஜேஷ் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குள் சென்றார். அப்போது அறையில் இருந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் செயல்பாட்டில் இருந்துள்ளது.

  ராஜேஷ் ஆக்சிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்றார். அவர் கையில் இரும்பு சிலிண்டரை வைத்திருந்ததால் எந்திரத்தில் உள்ள காந்தத்தன்மை அவரை இழுத்தது. இதனால் அவர் எந்திரத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவலறிந்த ராஜேஷ் மாருதியின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவரது உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்து செல்லக்கூடாது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

  இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை டாக்டர் சவுரப், வார்டு பாய் வித்தல் சவான், ஆயா சுனிதா சுர்வே ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
  Next Story
  ×