search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் ரோந்துப் படையினர் மீது கல்வீச்சு: 7 ராணுவ வீரர்கள் காயம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
    X

    காஷ்மீரில் ரோந்துப் படையினர் மீது கல்வீச்சு: 7 ராணுவ வீரர்கள் காயம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று ரோந்துப் படையினர் மீது சுமார்ட் 250 கல்வீசி தாக்கியதில் 7 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கனாவ்போரா பகுதி வழியாக இன்று பிற்பகல் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 250 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியதுடன் 11 ரோந்து வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், நான்கு  தீயிட்டு கொளுத்த முயன்றது.

    இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த ராணுவ அதிகாரி மயங்கி விழுந்தார். அவரது கைத்துப்பாக்கியை சிலர் பறிக்க முயன்றனர். அசம்பாவித்ததை தவிர்க்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு வாலிபர்கள் கொல்லப்பட்டனர்.



    இறந்தவர்களில் ஒருவர் பால்போரா பகுதியை சேர்ந்த ஜாவித் அஹனது பட், மற்றொருவர் ராவல்போரா பகுதியை சேர்ந்த சுஹைல் ஜாவித் லோனே என தெரியவந்துள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் 7 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.
    Next Story
    ×