என் மலர்

  செய்திகள்

  கைதான பாகன்களை படத்தில் காணலாம்.
  X
  கைதான பாகன்களை படத்தில் காணலாம்.

  குருவாயூர் கோவில் யானைகளின் தந்தங்கள் வெட்டி கடத்தல்: 3 பாகன்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குருவாயூர் கோவில் யானைகளின் தந்தங்களை உயிரோடு வெட்டி கடத்திய 3 பாகன்களை வனத்துறை அதிகாரிகளை கைது செய்தனர்.

  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான யானைகள் மற்றும் கோவிலுக்கு பரிசாக வழங்கிய யானைகள் என்று 30 யானைகள் உள்ளன.

  இந்த யானைகளை பராமரிக்க முகாம் உள்ளது. இந்த முகாமில் ஒவ்வொரு யானைக்கு ஒரு பாகன் நியமிக்கப்பட்டுள்ளார். பாகன்கள் யானைகளை குளிக்க வைத்து அதன் தந்தங்களை பாலீஷ் செய்து வருகிறார்கள்.

  இந்த முகாமில் பாகன்கள் பாலீஸ் போடும்போது யானையின் தந்தங்களை உயிரோடு துண்டு துண்டாக வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரி பிரசாந்துக்கு தகவல் கிடைத்தது.


  இதனையடுத்து முகாமில் நேற்று அவர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 யானை தந்தங்கள் துண்டு துண்டாக வெட்டி பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரி அதனை பதுக்கியது பாலக்காடு மாவட்டம் குளம்பள்ளியை சேர்ந்த கணேஷ்குமார் (வயது 48), ஆலப்புழா மாவட்டம் சேர்த்தாலியை சேர்ந்த உ‌ஷகுமார் (44), தாமரையூரை சேர்ந்த பிரேமன் (47) ஆகிய 3 பாகன்கள் என்பது தெரியவந்தது.

  விசாரணையில் அவர்கள் கூறும்போது சில பிரபலங்கள் குருவாயூர் கோவில் யானை தந்தங்களை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்று கூறி எங்களிடம் தந்தத்தை வெட்டித்தருமாறு கேட்டனர். அதன்பேரில் 5 கிலோ தந்தங்களை வெட்டினோம் என்றனர்.

  இதனையடுத்து பாகன்களை கைது செய்த வனத்துறை அதிகாரி அவர்களை சாவக்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×