என் மலர்

  செய்திகள்

  சிறுமியை கற்பழித்த வழக்கில் தந்தை சகோதரர் உட்பட 4 பேர் கைது
  X

  சிறுமியை கற்பழித்த வழக்கில் தந்தை சகோதரர் உட்பட 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலித்து ஓடிப்போனதால் குடும்பத்தினரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தந்தை-சகோதரர் கைது செய்யப்பட்டனர்.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூர்  தந்த்தாடா கிராமத்தைச்  சேர்ந்த 17 வயது பெண்  ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான 3 குழந்தைகளுக்கு தந்தையான  32 வயது  ஆணுடன்  பழகி வந்தார்.  அந்த பெண் அவருடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.  இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து அழைத்து வந்து உள்ளனர்.


  ஏற்கனவே  ஜூலை மற்றும் அக்டோபர் மாதமும் இது போல் அந்த ஆணுடன் அந்த பெண் ஓடி உள்ளார். அப்போதும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரை  சமாதானபடுத்தி அழைத்து வந்து உள்ளனர். அந்த ஆண் மீது பெண்ணின் குடும்பத்தினர் 2 முறை கடத்தல் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

  இந்த நிலையில் அந்த பெண் அலகாபாத் ஐகோர்ட்டில் கடந்த 2 ந்தேதி  ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது தந்தை மற்றும் சகோதரர் உள்பட  தனது குடும்பத்தினரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். மேலும் தனது குடும்பத்தினர் தனக்கு வலுக்கட்டாயமாக கருச்சிதைவு செய்யவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

  இதை தொடர்ந்து  கோர்ட் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் படி ஐபிசி பிரிவுகளில் 376 D (கும்பல் கற்பழிப்பு) மற்றும் 313 (பெண்களின் சம்மதமின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ்  போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

  Next Story
  ×