என் மலர்
செய்திகள்

தேர்தலில் சீட் வாங்கி தரக்கூறி சைலஜா அடிக்கடி என்னை சந்தித்தார்: புகழேந்தி
ஜெயலலிதா என் தங்கை என்று கூறிய சைலஜா தேர்தலில் சீட் வாங்கி தரக்கூறி அடிக்கடி என்னை சந்தித்தார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தான் ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். நாங்கள் எல்லாம் அன்போடு அம்மா என்று அழைக்கும் ஜெயலலிதாவுக்கு மகள் எதுவும் கிடையாது, இவரது தாயார் சைலஜா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து என்னை அடிக்கடி சந்திப்பார். ஜெயலலிதா என்னுடைய சகோதரி என்று கூறி வந்தார்.
ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுங்கள் என்று கேட்டு வந்தார். ஜெயலலிதாவின் சகோதரி என்பதற்கு ஆதாரம் கேட்ட போது அவர் ஆதாரம் எதையும் கூறவில்லை. போட்டோ கேட்ட போது கூட கொடுக்கவில்லை. பின்னர் அவர் எம்.பி -எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்பதை அப்போதே நான் கண்டுபிடித்து விட்டேன்.
இதனால் அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டேன். கன்னட சேனல்களில் என்னை திட்டி பேட்டியும் கொடுத்தார். நான் அதைப்பற்றி அப்போது கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story